மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறதா? வதந்திகளைப் பரப்பும் திமுக - வானதி கொடுத்த பதிலடி!

M K Stalin BJP Vanathi Srinivasan
By Vidhya Senthil Sep 01, 2024 02:10 PM GMT
Report

 தமிழகத்தில் இரயில்வே திட்டங்களுக்கு மட்டும் சுமார் ரூ.6,362 கோடி நிதி ஒதுக்கப்பட்ட்டுள்ளதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.   

வானதி ஸ்ரீனிவாசன்

இது குறித்து வானதி ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள X -தள பதிவில் தெரிவித்திருப்பதாவது : மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது” என்ற திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் அவதூறுகளைத் தவிடு பொடியாக்கும் விதமாக, இன்று தமிழகத்திற்கு மேலும் 2 வந்தே பாரத் இரயில்களின் சேவையைத் துவங்கி பிரதமர் மோடி  வைத்துள்ளார்.

மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறதா? வதந்திகளைப் பரப்பும் திமுக - வானதி கொடுத்த பதிலடி! | Bjp Mla Vanathi Srinivasan Has Accused The Dmk

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தமிழகத்தில் இரயில்வே திட்டங்களுக்கு மட்டும் சுமார் ரூ.6,362 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், “பட்ஜெட்டில் தமிழகம் என்ற பெயரே இல்லை, நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது” போன்ற வதந்திகளைப் பரப்பினார்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும், அவர்க் கூட்டணிக் கட்சி தலைவர்களும்.

சமூக நீதியை காலில் போட்டு மிதிக்கும் திமுக அரசு..கொந்தளித்த வானதி!

சமூக நீதியை காலில் போட்டு மிதிக்கும் திமுக அரசு..கொந்தளித்த வானதி!

 ரூ.6,362 கோடி நிதி

ஆனால், மத்திய அரசின் இரயில்வே திட்டங்கள் மூலம், தமிழகத்திற்கு 6 வந்தே பாரத் இரயில்கள், 77 மாதிரி அம்ரித் இரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல வளர்ச்சித் திட்டங்களைப் பற்றி, தமிழக மக்களுக்கு நாம் தொடர்ந்து எடுத்துக் கூறி வந்த நிலையில்,

மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறதா? வதந்திகளைப் பரப்பும் திமுக - வானதி கொடுத்த பதிலடி! | Bjp Mla Vanathi Srinivasan Has Accused The Dmk

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் மற்றும் மதுரை - பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிதாக இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு, தமிழக மக்கள் நலனின் மீதுள்ள அக்கறையில் அவர்களின் பயணங்களை எளிதாக்கும் நோக்கில் கூடுதலாக இரண்டு வந்தே பாரத் இரயில்களை வழங்கியுள்ள நமது மத்திய அரசிற்கு, ஒட்டுமொத்த தமிழக மக்களின் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வானதி பதிவிட்டுள்ளார்.