கார் விபத்தில் பாஜக எம்.எல்.ஏ மகன் உள்பட 7 பேர் உயிரிழப்பு

Killed BJP MLA SON 7 Person
By Thahir Jan 25, 2022 05:37 AM GMT
Report

மகாராஷ்டிரா மாநிலம் வர்தாவில் ஏற்பட்ட கார் விபத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ விஜய் ரஹாங்டேலின் மகன் அவிஷ்கர் ரஹாங்டேல் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த 7 பேரும் சங்வியில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆவர். அவர்கள் நேற்றிரவு 11.30 மணி அள்வில் வார்தா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, வாகனம் பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


காட்டுப்பன்றி ஒன்று அவர்களின் வாகனத்தில் மோதியதில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக எம்எல்ஏ விஜய் ரஹாங்டேலின் மகன் அவிஷ்கர் ரஹாங்டேல் உட்பட 7 மாணவர்களும் தேர்வு எழுதிவிட்டு, விருந்தில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.