பாஜக சட்ட மன்ற உறுப்பினர் மகன் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் - திகைத்து நின்ற போலீசார்

Karnataka
By Thahir Mar 03, 2023 05:49 AM GMT
Report

கர்நாடகாவில் சட்ட மன்ற உறுப்பினர் மகன் வீட்டில் கட்டுக்கட்டாக இருந்த பணத்தை பார்த்து போலீசார் திகைத்து நின்றனர்.

பணம் பறிமுதல் 

பாஜக எம்எல்ஏ மாதல் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மாதல் வீட்டில் இருந்து ரூ.6 கோடி பறிமுதல். பாஜக எம்எல்ஏ மாதல் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மாதல்.

இவர் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக லோக் ஆயுக்தாவின் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் பிரசாந்த் மாதலை நேற்று கைது செய்து, அவரது அலுவலகத்தில் இருந்து ₹1.7 கோடி ரொக்கம் பறிமுதல் செய்தனர். 

BJP MLA

இதனை தொடர்ந்து, லோக் ஆயுக்தா அதிகாரிகள் பாஜக எம்எல்ஏ மாதல் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மாதல் வீட்டில் நடத்திய சோதனையில், சுமார் ரூ.6 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக எம்.எல்.ஏ-வின் மகன் கைது செய்யப்பட்டுள்ளது, கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.