மத்திய அரசிடம் பணம் வாங்கி கொடுங்க நயினாருக்கு கோரிக்கை விடுத்த அப்பாவு சிரிப்பலையில் முதலமைச்சர்..!

M. K. Stalin BJP Tamil Nadu Legislative Assembly
By Thahir Apr 22, 2022 06:37 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்று முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மனதார வரவேற்பதாக பேசினார்.

மேலும் பேசிய நிலையில் முதலமைச்சரின் பார்வை ஊராட்சி உறுப்பினர்கள்,பஞ்சாயத்து சேர்மன்,ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வரை வந்திருக்கிறது.

சட்டமன்ற உறுப்பினர்கள் வரை அந்த பார்வை வரவில்லை என்ற ஆதங்கம் எல்லா சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் இருப்பதாக தெரிவித்தார்.

எனக்கு கூட வேண்டாம்.தேவைப்படுகிற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நீங்கள் ஒரு கார் கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும்.சிந்தித்து பார்க்கலாம்.

அதே நேரத்தில் ஊராட்சி அமைப்புகளுக்கு இவ்வளவு அதிகாரம் கொடுக்கின்ற அதே நேரத்தில் ஊராட்சி உறுப்பினர்கள்,பஞ்சாயத்து தலைவர்கள் சொல்கின்ற கருத்தை அந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எல்லோரும் அதை கேட்டு செவிமடுக்கின்ற வகையில் அந்த அதிகாரிகளுக்கு ஒரு அறிவிப்பை செய்ய வேண்டும்.

அதே நேரத்தில் அந்த ஊராட்சியில் மக்கள் பிரதிநிதி தேவையான திட்டங்களை நிறைவேற்ற நிதியும் தேவைபடுகிறது என்றார்.

மேலும் அவர்,வலு சேர்க்கின்ற இவ்வளவு அதிகாரம் கொடுக்கின்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு அந்த நிதியும் தாங்கள் வழங்க வேண்டும்.

எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பிலோ முடிந்த அளவுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்குகின்ற வகையிலாவது ஒரு கார் கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது சபாநாயகர் அப்பாவு மத்திய அரசிடம் பரிந்துரை செய்து பணம் வாங்கி கொடுத்திடுங்க என்றார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிரிக்கவே அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சிரித்தனர்.