பாஜக எம்.எல்.ஏக்களுக்கு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
தமிழக சட்டசபையில் சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டப பிரச்சனை தொடர்பாக பாஜக புகாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
அயோத்தியா மண்டப விவகாரத்தில் அரசியலை புகுத்தி கட்சியை பலப்படுத்த நினைத்தால் அது நடக்காது என்றார்.
சாமனிய மக்களின் பெட்ரோல் விலை,டீசல் விலை,சிலிண்டர் விலை எல்லாம் உயர்ந்து கொண்டே போய்க்கொண்டுள்ளது.
இதை கட்டுப்படுத்த ஒன்றிய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்றார்.நமது மாநிலத்திற்கு வரவேண்டிய நிதியை பற்றி விளக்கமாக,விரிவாக சம்மந்தப்பட்ட அமைச்சர் மற்றும் பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளதாக கூறினார்.
மேலும் அவர் அதற்கு நீங்கள் உறுதுணையாக இருந்து அதை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தேவையில்லாமல் அரசியலை புகுத்தி கட்சியை பலப்படுத்த நினைத்தால் அது நடக்கே நடக்காது என்று கூறினார்.