பெட்ரோல் விலை உயர்வுக்கு தாலிபான்கள் தான்.. பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு
பெட்ரோல் விலை உயர்வுக்கு தாலிபான்கள் தான் காரணம் என்று பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லாத் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை தினமும் நிர்ணயிக்கப்படும் முறை அமலில் உள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பின் ராக்கெட் வேகத்தில் சென்ற பெட்ரோல் விலை இந்தியாவின் பல இடங்களில் கடந்த ஜூலை மாதம் ரூ.100ஐ கடந்து வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியளித்தது.
இதனிடையே கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லட் இந்தியாவின் எரிபொருள் விலை உயர்வின் பின்னணியில் தலிபான்கள் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அவர்களின் பிரச்சனை தொடங்கிய காலத்திலிருந்து தான் உலகில் எரிபொருள் பற்றாக்குறை உருவானதாகவும், அதுவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வழிவகுத்தது என்றும் கூறியுள்ளார்.