தரமான சாலைகள் தான் விபத்து அதிகரிக்க காரணம் : பாஜக எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை
மத்தியபிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டம் மண்டானா தொகுதி பாஜக எம்.எல்.ஏ. நாராயண் பட்டேல். இவர் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு
அந்த நிகழ்ச்சிக்கு பின் நாராயண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மோசமான சாலைகள் குறைவான சாலைவிபத்துகளை ஏற்படுத்துவதாக நீங்கள் நம்புகிறீர்களா? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
தரமான சாலைகளால் விபத்து
அதற்கு பதிலளித்த நாராயண், எனது தொகுதியில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. சாலைகள் மிகவும் தரமாக உள்ளது, வாகனங்கள் மிகவும் வேகமாக செல்கின்றன இதனால், கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படும் ஆபத்து நிலவுகிறது.

இதன் நான் அனுபவித்துள்ளேன். அனைவரும் அல்ல சில டிரைவர்கள், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் சாலைவிபத்துக்கு காரணமாகுகின்றனர் எனக் கூறியுள்ளார், தரமான சாலைதான் விபத்துக்கு காரணம் என பாஜக எம் எல் ஏ கூறிய்யுள்ளது தற்போது பேசு பொருளாகியுள்ளது.