பாஜக எம்எல்ஏ கன்னத்தில் அறைந்த விவசாயி - சிக்கினது யார் தெரியுமா?

uttarpradesh bjp mla slap
By Petchi Avudaiappan Jan 08, 2022 06:45 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

பாஜக எம்எல்ஏ கன்னத்தில் விவசாயி அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் சிலை திறப்பு நிகழ்ச்சியில் உன்னாவ் பாஜக எம்எல்ஏ மேடையில் இருக்கிறார். அப்போது ஒரு முதியவர் அவருக்கு அருகில் வந்து, அவரது முகத்தில் அறைவது போல் தெரிகிறது. உத்தரப்பிரதேச மாநில தேர்தலுக்கு முன்பாக யோகி ஆதித்யநாத் அரசை விமர்சிக்கும் வகையில் எதிர்கட்சிகளுக்கு அந்த வீடியோ தீனியாக அமைந்துள்ளது.

ஆனால்  விவசாயி தன்னை கன்னத்தில் அன்புடன் தட்டிச்சென்றதாக பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தா தெரிவித்துள்ளார்.மூன்று நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் வேகமாக வந்த இருவர் அந்த முதியவரைச் சூழ்ந்துகொள்கின்றனர். அங்கிகிருந்தே அவரது செயலுக்காக அவரைக் கேள்வி கேட்கிறார்கள் - அவர்கள் அனைவரும் மேடையில் இறங்கும்போது அவரை அழைத்துச் செல்கிறார்கள்.

இந்த வீடியோ குறித்து முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது. அதில், பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தா ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் விவசாயி ஒருவர் எம்எல்ஏவை அறைந்துள்ளார். அவர் மீது விழுந்த அறை, எம்எல்ஏ மீதான கோபத்தில் அல்ல, பாஜக தலைமையிலான யோகி ஆதித்யநாத் அரசின் மோசமான கொள்கை, ஆட்சிக்கு விழுந்த அடி என்று விமர்சித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்த், அடித்த முதியவருடன் பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள் முதியவரிடம் அன்பாக அடித்ததாக கூறுகிறீர்கள்? ஆனால், அது தவறான தோற்றத்தை கொடுக்கவில்லையா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அந்த முதியவர் நான் அவரை அடிக்கவில்லை.. நான் அவரை நெருங்கிவந்து, மகனே என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

பாஜக எம்எல்ஏ பேசுகையில், இந்த சம்பவத்தை அரசியல் லாபத்துக்காக எதிர்க்கட்சிகள் திரித்துள்ளனர். அவர்களுக்கு எந்த பிரச்னையும் கிடைக்கவில்லை. அதனால், விவசாயிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக இருக்கிறார்கள் என்பது போன்ற தோற்றத்தை காட்ட விரும்புகிறார்கள். இந்த முதியவர் என் தந்தையைப் போன்றவர், அவர் ஏற்கனவே இதேபோல் செய்திருக்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.