கெட் அவுட் ரவி vs ஆளுநர்ஆளுமை - தமிழகத்தில் தொடங்கிய போஸ்டர் யுத்தம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழகத்தில் போஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக பாஜகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
ஆளுநர் சர்சை
சட்ட சபையில் ஆளுநர் நேற்று உரையாற்றியபோது திராவிட மாடல், அமைதி பூங்கா உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் புயலை கிளப்பியது,ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளி நடப்பு செய்தார். அதன் பின்னர் ஆளுநருக்கு எதிராக டுவிட்டர் தளத்தில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது.
தொடங்கிய போஸ்டர் யுத்தம்
இந்த நிலையில் கெட் அவுட் ரவி என்று சென்னையில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. சென்னையில் பல்வேறு பகுதிகளில் கெட் அவுட் ரவி என்ற வாசகத்துடன் திமுகவினரால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆளுநருக்கு ஆதரவாக பாஜகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
தமிழக ஆளுநருக்கு ஆதரவாக 'ஆளுநரின் ஆளுமையே' என பாஜகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். ஆளுநருக்கும் ஆளுங்கட்சிக்கும் மோதல் உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில் தற்போது திமுக பாஜக இடையே போஸ்டர் போர் உருவாகியுள்ளது