பாஜக உறுப்பினர் ஜடேஜா தான் சிஎஸ்கே வெற்றிக்கு காரணம் - அண்ணாமலை கருத்தால் சர்ச்சை..!
பாஜக உறுப்பினர் ஜடேஜா தான் சிஎஸ்கே வெற்றிக்கு காரணம் என அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ள சம்பவம் கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் இறுதி போட்டி
ஐபிஎல் போட்டியின் இறுதி போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்று. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு சாய் சுதர்சன் 47 பந்துகளில் 96 ரன்களும், சஹா 54 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 214 ரன்கள் குவித்தது.

இதன்பின் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை அணி முதல் ஓவரில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டு, போட்டியை கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேல் தாமதப்படுத்தியதால் போட்டியின் ஓவர் 15ஆக குறைக்கப்பட்டு, வெற்றி இலக்கும் 171ஆக நிர்ணயிக்கப்பட்டது.
சாம்பியன் பட்டத்தை வென்ற CSK
90 பந்துகளில் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை அணிக்கு டீவன் கான்வேவும் – ருத்துராஜ் கெய்க்வாட்டும் நல்ல துவக்கம் கொடுத்தனர்.
பின்னர் அடுத்தடுத்து நுார் அகமது வீசிய பந்தில் இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் பரபரப்பாக சென்ற போட்டியில் சென்னை அணி வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் சோகத்தில் முழ்கினர்.
கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரவீந்திர ஜடேஜா ஒரு சிக்சர் மற்றும் ஒரு போர் அடித்து அணியை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்ல காரணமாக அமைந்தார்.

அண்ணாமலை கருத்தால் சர்ச்சை
சென்னை அணியின் வெற்றிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதே போல தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்து தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் CSK-வில் பெற்றிக்கான ரன் அடித்தது ஒரு பாஜக காரியகர்த்தா! ஜடேஜா ஒரு பாஜக காரிகர்த்தா, அவர் மனைவி திருமதி. ரிவபா ஜடேஜா ஜாம்நகர் வடக்கு தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்..அவர் ஒரு குஜராத்காரர்
பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் CSKவிற்கு வெற்றியை தேடி தந்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்துக்கு கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கிரிக்கெட் வீரர் ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா. அவர் மனைவி திருமதி.ரிவபா ஜாம்நகர் வடக்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர். மேலும் அவர் குஜராத்காரர்!
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) May 30, 2023
பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் CSKவிற்கு வெற்றியை தேடி தந்துள்ளார்
- மாநில தலைவர்
திரு.@annamalai_k#CSK #Annamalai #9YearsOfSeva pic.twitter.com/zvy6B2eUlg
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan