பாஜக சவாலை ஏற்ற மம்தா பேனர்ஜி.. நந்திகிராமில் வேட்பு மனு தாக்கல்
தமிழகத்தோடு சேர்த்து மேற்கு வங்கமும் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. திரினாமுல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. இந்நிலையில் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக திரினாமுல் காங்கிரசை சேர்ந்த பல எம்.எல்.ஏக்களும் பாஜகவில் இணைந்தனர். அதில் சுவேந்து அதிகாரி முக்கியமான நபர்.
அவர் நந்திகிராம் தொகுதியைச் சேர்ந்தவர். மம்தா பேனர்ஜியும் நந்திகிராமில் தான் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கினார். இந்நிலையில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட முடியுமா என பாஜக மம்தா பேனர்ஜிக்கு சவால் விட்டிருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட மம்தா தன்னுடைய சொந்த தொகுதியான பவானிபூரிலிருந்து விலகி நந்திகிராமில் போட்டியிடுவதாக அறிவித்தார்.
இன்று அதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் நந்திகிராம் தொகுதி நடைபெறும் சட்டமன்ற தேர்தல்களில் மிக முக்கியமான நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.