ஜெயலலிதா கோயிலில் பாஜக தலைவர்களின் புகைப்படங்கள்: சர்ச்சையில் அதிமுக

photo temple bjp aiadmk jayalalithaa
By Jon Mar 24, 2021 06:38 PM GMT
Report

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோயிலில் பாஜக தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது அதிமுக கட்சியில் சர்ச்சையினை கிளப்பியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்காக மதுரை திருமங்கலம் அருகே குன்னத்தூரி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 12 ஏக்கரில் கோவில் கட்டியுள்ளார்.

கடந்த ஜனவரி 30ஆம் தேதி இந்த கோயிலை சமீபத்தில் முதல்வர் பழனிசாமி சமீபத்தில் திறந்துவைத்தார். கலைநயத்துடன் கட்டப்பட்ட கோயிலில் 7 அடி உயரம் 400 கிலோ எடையில் ஜெயலலிதா எம்ஜிஆர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மதுரையில் உள்ள ஜெ.கோயிலில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் உதயகுமார், இந்த கோயில் அம்மாவின் தைரியத்தையும், தியாகத்தையும் வெளிப்படுத்தும் விதமாக கட்டப்பட்டுள்ளது. இங்கு பாஜக தலைவர்கள் புகைப்படங்கள் உள்ளதற்கான காரணம் மத்திய அரசு தமிழக அரசிற்கு ஏராளமான திட்டங்களை கொடுத்துள்ளது. அதனால் பாஜக தலைவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.

ஏற்கனவே அதிமுகவுக்கு ஓட்டு போடுவது பாஜகவுக்கு ஓட்டுபோடுவது போல என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார். வட மாநிலங்களில் பல இடங்களில் பாஜகவிற்கு ஏறுமுகமாக உள்ள நிலையில் தமிழகம் மட்டுமே பாஜகவுக்கு இடம் கொடுக்காமல் இருக்கிறது. ஆகவே இந்த முறை தேர்தலில் தமிழகத்தில் எப்படியேனும் காலூன்ற நினைக்கும் பாஜக, அதிமுகவை கருவியாக பயன்படுத்தி வருகிறது என்பது எதிர்கட்சிகளின் கருத்தாக இருக்கின்றது.