ஹிஜாப் எதுக்கு போட்டு இருக்க கழட்டு - பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக பிரமுகர்

Tamil nadu Tamil Nadu Police Nagapattinam
By Thahir May 26, 2023 08:46 AM GMT
Report

ஹிஜாப் அணிந்திருந்த அரசு பெண் மருத்துவருக்கு மிரட்டல் விடுத்ததாக பாஜக நிர்வாகி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பரிந்துரைத்த மருத்துவர் 

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஜன்னத் பேகம் என்பவர் அரசு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை (24.05.2023) இரவு நோயாளி ஒருவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர் ஜன்னத் பேகம் நெஞ்சு வலியின் தீவிரத்தை உணர்ந்து அவரை நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுாமாறு பரிந்துரைத்துள்ளார்.

bjp-leader-who-threatened-woman-doctor-wear-hijab

அப்போது அங்கு வந்த பாஜகவைச் சேர்ந்த புவனேஸ்வரராம் என்பவர் மருத்துவர் ஜன்னத் பேகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஹிஜாப்பை கழட்ட சொல்லி பாஜக பிரமுகர் மிரட்டல் 

மருத்துவர் நோயாளியின் நலன் கருதி அவரை உடனடியாக தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது தான் நோயாளிக்கு நல்லது என்று கூறி இருக்கிறார்.

இதைக் கேட்க மறுத்த புவனேஸ்வரராம் மருத்துவரை இழிவாக பேசி அவர் அணிந்திருந்த ஹிஜாப் உடையை நீக்க சொல்லியும் மருத்துவமனையில் பணிபுரியும் போது எதற்கு ஹிஜாப் அணிந்து இருக்கிறாய் என்றும் தகராறு செய்து மருத்துவமனை ஊழியர்களையும் இழிவாக பேசியிருக்கிறார்.

இந்த நிலையல் அவர் மீது கீழையூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சம்மந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து புவனேஸ்வரராம் என்பவரை கைது செய்ய தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியகியுள்ளது.