தன் காரை தானே கொளுத்தி நாடகமாடிய பாஜக பிரமுகர் - விசாரணையில் பரபரப்பு சம்பவம்
மதுரவாயல் கிருஷ்ணாநகர் பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ்குமார் (48). இவர் பாஜக பிரமுகராக உள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இவர் வீட்டு வாசலில் இருவருடைய கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்த அக்கம், பக்கத்தினர் அலறி அடித்துக் கொண்டு காரின் தீயை அணைத்தனர்.
மேலும், இது குறித்து சதீஷ்குமார் போலீசில் புகார் கொடுத்தார். யாரோ என்னுடைய காருக்கு தீ வைத்து கொளுத்திவிட்டதாக கூறினார். இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, அந்த சிசிடிவி கேமராவில் நபர் காருக்கு தீ வைத்து கொளுத்தியது பதிவாகியிருந்தது.
இதனையடுத்து, போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காரின் உரிமையாளர் சதீஷ்குமாரே காருக்கு தீ வைத்து கொளுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து, சதீஷ்குமாரை போலீசார் கைது செய்து காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில்,
குடும்ப பிரச்சினை காரணமாக என் காரை நானே தீ வைத்து கொளுத்தினேன். என் மனைவி தினமும் பணம், நகை கேட்டு எனக்கு தொல்லை கொடுத்து வந்தார். இதனால் நான் மனநிம்மதியில்லாமல் இருந்து வந்தேன்.
ஒரு கட்டத்தில் என் காரை விற்று எனக்கு நகை, பணம் வாங்கித்தருமாறு என்னிடம் சண்டைபோட்டார். இதனால், எனக்கும், மனைவிக்கும் பயங்கரமான சண்டையாக மாறியது. ஒருகட்டத்தில் ஆத்திரம் தாங்காமல் என் காரை நானே வெளியே சென்று தீ வைத்து கொளுத்திவிட்டேன்.
இவ்வாறு விசாரணையில் கூறியுள்ளார்.
தற்போது சமூகவலைத்தளத்தில் காரை தீ வைத்து கொளுத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.