முத்தத்தில் நனைந்த பாஜக தலைவர் எல். முருகன் - பிரச்சாரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இதனையடுத்து பாஜக தலைவர் எல்.முருகன், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஒன்றிய பகுதிகளில் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கிராமம் கிராமமாக சென்று மக்கள் அனைவரிடமும் வாக்குகளைச் சேகரித்து வருகிறார். இந்நிலையில், லட்சுமிபுரம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த முருகனுக்கு ஆரத்தி எடுப்பதற்காகவும், சிறப்பான வரவேற்பு அளிப்பதற்காகவும் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் குவிந்தனர்.

அங்கு வந்த எல்.முருகன், மக்களிடம் வாக்கு சேகரித்ததோடு அல்லாமல், மத்திய - மாநில அரசுகள் செய்துள்ள சிறப்பான நலத்திட்ட உதவிகளை எடுத்துரைத்தார். அப்போது, ஒரு குழந்தை பேசிக்கொண்டிருந்த முருகனுக்கு கட்டியணைத்து முத்தம் கொடுத்து வரவேற்பு அளித்தது.
இதை பார்த்ததும் அங்கு கூடியிருந்தவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.