மீண்டும் தமிழகம் வரும் பாஜக தேசிய தலைவர் : காரணம் என்ன?

BJP
By Irumporai Dec 23, 2022 05:36 AM GMT
Report

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக வரும் 27-ஆம் தேதி தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

 ஜெபி நட்டா

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா டிச.27ம் தேதி தமிழக வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக பாஜகவினருடன் ஆலோசனை மேற்கொள்ள 7-ஆம் தேதி கோவை வருகிறார் ஜெ.பி.நட்டா.

மீண்டும் தமிழகம் வரும் பாஜக தேசிய தலைவர் : காரணம் என்ன? | Bjp Leader Is Coming To Tamil Nadu

தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைக்க வேண்டும் என்று மாநில தலைவர் அண்ணாமலை தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் பாஜகதான் எதிர்க்கட்சி என்றும் திமுகவை எதிர்த்து கேள்வி கேட்க பாஜகவுக்கு மட்டும் தான் தைரியம் உள்ளது எனவும் பல்வேறு மேடைகளில் பேசி வருகிறார்.  

தமிழகம் வரும் நட்டா

அதுமட்டுமில்லாமல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு மாபெரும் தாக்கத்தை பாஜக ஏற்படுத்தும் என்றும் கூறி உள்ளார். பாஜக மூத்த நிர்வாகிகள் அமித்ஷா, ஜெ.பி நட்டா அவ்வப்போது பிரதமர் மோடி என பலரும் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், வரும் 27-ஆம் தேதி தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் வருகிறார்.