பாஜக தலைவர் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக உள்ளார் : அமைச்சர் மா.சுப்ரமணியன்
பாஜக தலைவர் நீட் தேர்வு வேண்டும் என கூறினால், அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக உள்ளார் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை சவால்
நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு கிடைக்காது என்றும், இது குறித்து திமுகவுக்கு சவால் விடுவதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் எண்ணம்.
தமிழ்நாட்டிற்கு எதிராக
பாஜக தலைவர் நீட் தேர்வு வேண்டும் என கூறினால், அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக உள்ளார் என்றே பொருள் கொள்ளப்படும். என தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் நிலவரங்கள் முழுமையாக தெரிந்தால் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இவ்வாறு கருத்து தெரிவிக்க மாட்டார். அவர் கருத்து சொல்லும் முன் தமிழ்நாட்டின் நிலவரத்தை பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.