தமிழகம் முழுவதும் பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம்
நடைபயணத்தை ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் ஓராண்டு நடைபயணம் மேற்கொள்ளும் அவர் 234 தொகுதிகளிலும் பாஜக செயல் திட்டங்கள் குறித்தும் பிரதமர் மோடியின் ஆட்சி குறித்தும் எடுத்துரைக்க உள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளும் திமுக அரசிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.
இந்த நிலையில், திமுக அமைச்சர்கள் குறித்தும் பல்வேறு செய்தியாளர்கள் சந்திப்பில் அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இந்தநிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும், பாஜக செயல்படுத்தி வரும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்தும் அவர் எடுத்துரைக்க உள்ளார்.
நடைபயணத்தை ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கும் அவர் ஓராண்டு தமிழகம் முழுவதும் நடைபயணமாக செல்கிறார்.
2024 நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.