மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்ட இளையராஜாவின் கருத்துக்கு எல்.முருகன் புகழாரம்
மோடியின் ஆட்சியை கண்டு அம்பேத்கரே பெருமையடைவார் என கூறிய இளையராஜாவை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பாராட்டியுள்ளார்.
புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் "மோடியும் அம்பேத்கரும்" என்ற பெயரிலான புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி இருக்கும் நிலையில் அதில் மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என்றும்,
மோடிக்கும், அம்பேத்கருக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்தை பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இளையராஜாவின் இந்த கருத்தை பாராட்டியுள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இசையமைப்பாளர் இளையராஜா செய்த குற்றம் என்ன? அவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் யாரும் எந்த கருத்தையும் வெளிப்படுத்த கருத்து சுதந்திரம் அனுமதிக்கிறது எனவும் கூறினார்.