மோதலை உருவாக்கும் வகையில் டுவிட்டர் பதிவு..பாஜக பிரமுகர் கல்யாண ராமன் நள்ளிரவில் அதிரடி கைது

DMK Arrest MK Stalin bjp kalyanaraman
By Thahir Oct 17, 2021 05:19 AM GMT
Report

இரு குழுக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்ட பாஜக பிரமுகர் கல்யாணராமன் நேற்று நள்ளிரவில் திடீரென கைது செய்யப்பட்டார்.

பாஜக பிரமுகரான கல்யாணராமன்,சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

இரு குழுக்கள் இடையே மோதலை உருவாக்கும் வகையில் ட்விட்டரில் கருத்தை பதிவு செய்ததால் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மோதலை உருவாக்கும் வகையில் டுவிட்டர் பதிவு..பாஜக பிரமுகர் கல்யாண ராமன் நள்ளிரவில் அதிரடி கைது | Bjp Kalyanaraman Arrest Dmk

இந்த நிலையில்,அவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் குறித்தும் திமுக எம்பி செந்தில் குமார்,

நடிகை மற்றும் டாக்டருமான சர்மிளா ஆகியோர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் பதிவு செய்துள்ளதால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து தருமபுரி திமுக எம்பி செந்தில் குமாரின் உதவியாளர்,அவதூறு கருத்துகளை பதிவிட்டு வரும் பாஜக பிரமுகர் கல்யாணராமனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து,புகாரின் அடிப்படையில் கல்யாணராமனை,சென்னை வளசரவாக்கம் தேவிகுப்பம் அன்பு நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது, IPC 153(a) , 505(2) ஆகிய இரு பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.