பாஜக கூட்டணியில் அமமுக இணைந்ததா?: விளக்கமளித்த எல்.முருகன்

admk dmk ntk ammk
By Jon Feb 20, 2021 01:45 AM GMT
Report

பாஜக கூட்டணியில் தினகரன் அவர்களது அமமுக கட்சி இணைந்ததாக தகவல்கள் பரவி வருகிறது. பாஜக ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தினகர ன் அவர்களின் அமமுக கூட்டணியில் சேரவுள்ளதாக பேசப்பட்டு வந்தன.

ஏனெனில் தற்போது அமமுக இந்த கூட்டணியில் இல்லையெனில் கட்சியின் ஓட்டுகள் அனைத்தும் சிதறி திமுக வசம் செல்ல வாய்ப்புள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறுகையில் அமமுக கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து மேலிடம் முடிவெடுக்கும் எனவும்,மேலும் தற்போது வரை அமமுக தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.