அண்ணாமலையை விமர்சித்தால் ADMK files வரும் - பாஜக எச்சரிக்கை..!
மாநில தலைவர் அண்ணாமலையை பற்றி விமர்சனம் செய்தால், மகா.சுசீந்திரன் அதிமுகவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாக்குவாத மோதல்
மத்தியில் கூட்டணியில் இருந்து வரும் நிலையிலும், தொடர்ந்து மாநிலத்தில் அதிமுக - பாஜக கூட்டணியில் பெரும் முரண்பாடுகள் இருந்து வருகிறது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் அண்ணாமலையை விமர்சிப்பதும், அதற்கு அண்ணாமலையும் அதிரடியாக கருத்துக்களை தெரிவிப்பதும் தொடர்ந்து வருகின்றது.
இருப்பினும், கூட்டணியில் தான் நீடிக்கிறோம் என இக்கட்சிகள் தெரிவித்து வரும் நிலையில், தற்போது பாஜகவை சேர்ந்த மதுரை மாநகர் தலைவர் மகா.சுசீந்திரன் அதிமுகவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊழலை பற்றி பேசுவோம்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாமலையை பற்றி தொடர்ந்து தரம் தாழ்ந்து விமர்ச்சித்து வருவதை தங்கள் மனதை புண் படுத்தி உள்ளது என குறிப்பிட்டு, தொடர்ந்து தரம் தாழ்ந்து விமர்ச்சித்து வருவதை தங்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.
அதிமுகவின் பலமும், பலவீனமும் தங்களுக்கு தெரியும் என குறிப்பிட்ட அவர், ஆளும்கட்சி செய்கின்ற ஊழல்களை கண்டறிந்து DMK File 1 & DMK File 2 என நடவடிக்கை எடுத்த தங்களுக்கு ஆண்ட அதிமுகவின் ஊழல் அமைச்சர்களின் பட்டியலை தேடி எடுக்க எவ்வளவு நேரமாகும் என்றும் பதிவிட்டுள்ளார்.
இனிவரும் காலங்களிலும் அண்ணாமலை மீதான விமர்சனகள் தொடர்ந்தால், அதிமுகவின் அமைச்சர்களை பற்றிய ஊழல் குறித்து மக்களிடம் பேச வேண்டி வரும் என்று அவர் தனது அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.