பொய் சொல்வதை மட்டுமே முழு நேர பிழைப்பாக வைத்துள்ளது பாஜக - எம்.பி.வெங்கடேசன்

BJP
By Thahir 2 மாதங்கள் முன்

பொய் சொல்வதை மட்டுமே முழு நேர பிழைப்பாக பாஜக வைத்துள்ளதாக எம்.பி.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

எய்ம்ஸ் பணிகள் முடிவடைந்ததா?

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் 100-ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

பொய் சொல்வதை மட்டுமே முழு நேர பிழைப்பாக வைத்துள்ளது பாஜக - எம்.பி.வெங்கடேசன் | Bjp Is Lying Mp Venkatesan

இந்நிலையில் தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ளன.

எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் 100ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் முடிந்ததும் அதை பிரதமர் திறந்து வைப்பார் என கூறப்பட்டிருந்தது.

பொய் சொல்கிறது பாஜக 

இந்த நிலையில் எம்.பி வெங்கடேசன் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி.வெங்கடேசன்,

புல் புல் பறவைகள் மூலம் இரவோடு இரவாக கட்டிடத்தை கட்டி முடித்துவிட்டார்களோ என்று நினைத்தோம் ஆனால் இங்கு வந்து பார்த்தால் பெயர் பலகையை கூட காணவில்லை.

பொய் சொல்வதை மட்டுமே முழு நேர பிழைப்பாக வைத்துள்ளது பாஜக - எம்.பி.வெங்கடேசன் | Bjp Is Lying Mp Venkatesan

மேலும் வச்ச செங்கலை கூட காணவில்லை என்று மாணிக்கம் தாகூர் சொல்கிறார். பொய் சொல்வதை மட்டுமே முழு நேர பிழைப்பாக வைத்துள்ளது பாஜக.

பின்னர் பேசிய எம்பி மாணிக்கம் தாகூர், 95 சதவீத வேலைகள் முடிந்து எய்ம்ஸ் கட்டிடத்தை காணவில்லை. தமிழக மக்களை பாஜக மோடி அரசு வஞ்சிக்கிறது, ஏமாற்றுகிறது என்று விமர்சித்தார்.