தமிழக நிதி அமைச்சருக்கு ஆழ்ந்த நிதி அறிவு இல்லை - H.ராஜா
சிவகங்கை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் வாக்கு வங்கி அரசியலுக்காக மத்திய அரசை எதிர்ப்பது திமுகவின் டிஎன்ஏ-வில் உள்ளது.
மத்திய அரசு ஒத்துழைப்புடன் கூடிய சமஸ்தி ஆட்சி முறை தமிழகத்திற்கு நல்லது என யோசனை தெரிவித்தார். மேலும், நீட் தேர்வு உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் வந்துள்ளது. இதனை மத்திய அரசும் நிறுத்த முடியாது என்ற ஹெச்.ராஜா, நீட் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களிடையே சந்தேகத்தில் கொண்டு செல்லக்கூடாது என்றார்.

நீட் தேர்வினால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் கடந்த ஆண்டு நீட் தேர்வின் மூலம் 450 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் அநாகரிகமான ஒரு நபர் துரதிருஷ்டவசமாக தமிழகத்தின் நிதி அமைச்சராக உள்ளார் என்று சாடிய ஹெச்.ராஜா, நிதி அமைச்சருக்கு நிதி பற்றிய ஆழ்ந்த அறிவு அவருக்கு இல்லை என்றும், பொறுப்புக்கு வந்ததால் அவர் உயர்ந்தவர் இல்லை என ஹெச்.ராஜா கடுமையாக விமர்சித்தார். மத்திய அரசு ஒன்றிய அரசு என்றால், மாநில அரசு ஊராட்சியா? என்று கேள்வி எழுப்பி அவர், தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படாமலிருக்க நிதி அமைச்சரை தமிழக முதல்வர் கண்டிக்க வேண்டும் என்றார். ஒன்றியம் என்ற வார்த்தை சதித்திட்டத்தின் பங்காக தெரிகிறது என கூறிய அவர் பெட்ரோல், டீசல் வரியை மாநில அரசு ஒத்துழைத்தால் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர நாங்கள் தயார் என்றார்.
சென்னையில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு சொந்தமான கலைஞர்
கருணாநிதி பொறியியல் கல்லூரி வளாகத்தில், கோயில் நிலம் அபகரிக்கப்பட்டு உள்ளது. அதனை அமைச்சர் சேகர்பாபு மீட்டுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக ஹெச்.ராஜா தெரிவித்தார்.