அதானி விவகாரம்.. பாஜகவின் தொடர்ப்பு இதுதான் - எச்.ராஜா விளக்கம்!

Tamil nadu H Raja Gautam Adani Karur
By Swetha Nov 27, 2024 03:10 AM GMT
Report

அதானி விவகாரத்தில் பாஜகவுக்கு தொடர்பு இல்லை என்று எச்.ராஜா விளக்கமளித்துள்ளார்.

எச்.ராஜா

பிரபல தொழிலதிபர் கெளதம் அதானி இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,000 கோடி லஞ்சம் கொடுத்து முறைகேடாக பெற்ற ஒப்பந்தத்தில் அமெரிக்காவில் முதலீடு திரட்டியது தொடர்பாக அமெரிக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதானி விவகாரம்.. பாஜகவின் தொடர்ப்பு இதுதான் - எச்.ராஜா விளக்கம்! | Bjp Has No Link In Adani Issue Says H Raja

இந்த வழக்கில் கெளதம் அதானி, சாகர் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு அமெரிக்க நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த நிலையில்,   கரூரில் பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்து சபரிமலைக்கு மாலையிட்டு பக்தர்கள் செல்லுகிற சமயத்தில் அய்யப்ப சுவாமியை பற்றி கேலியும், கிண்டலுமாக சிலர் பேசி வருகிறார்கள். இதற்கு போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதானி - மு.க.ஸ்டாலின் ரகசிய சந்திப்பு; லஞ்ச வழக்கில் தொடர்பா? விளக்கம் கேட்கும் ராமதாஸ்

அதானி - மு.க.ஸ்டாலின் ரகசிய சந்திப்பு; லஞ்ச வழக்கில் தொடர்பா? விளக்கம் கேட்கும் ராமதாஸ்

அதானி விவகாரம்.. 

கடந்த 4 நாட்களில் சமூக வலைதளங்களில் இந்து விரோத பதிவுகள் வந்து கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதானி விவகாரத்திற்கும், பிரதமருக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.வங்காளதேச அரசாங்கம் மின்சாரத்திற்கான தொகையை கொடுக்கவில்லை.

அதானி விவகாரம்.. பாஜகவின் தொடர்ப்பு இதுதான் - எச்.ராஜா விளக்கம்! | Bjp Has No Link In Adani Issue Says H Raja

அப்போது அமெரிக்கா நிர்ப்பந்தம் செய்தும் அதானி மின்சார வினியோகத்தை நிறுத்திவிட்டார். அதனால் இப்படியொரு குற்றச்சாட்டு வந்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, சத்தீஷ்கார், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில்,

அதானி சோலார் பவர் ஒப்பந்தம் வாங்குவதற்காக லஞ்சம் கொடுத்ததாக கூறுகிறார்கள். ஆனால் இந்த 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடைபெறவில்லை. அதனால் அதானி விவகாரத்திற்கும், பாஜகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. என்று தெரிவித்துள்ளார்.