கொரோனா வைரஸை விட ஆபத்தான நோயாக பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து வருகிறது - கே.எஸ்.அழகிரி
தமிழகத்தில் பாஜக கால்பதிக்க கூடாது, என்ற நோக்கத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரி திமுக கூட்டணியில் 25 தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக கூறிய அவர், அரசியலில் ஏற்ற இறக்கங்கள் என்பது இயல்பு . பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் கட்சி மட்டுமே என்றார். தொடர்ந்து பேசிய கே.எஸ் அழகிரி, தமிழகத்தில் பாஜக கால் பதிக்கக் கூடாதுஅதிமுக கூட்டணி வெற்றி பெறக் கூடாது என்ற நோக்கத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் கொரோனா வைரஸை விட ஆபத்தான நோயாக பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து வருவதாகவும் அந்த நோயை மற்ற கட்சிகளுக்கு பாஜக பரப்பி வருவதாகவும் கூறினார்.
வருங்காலத்தில் காங்கிரஸ் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம் அரசியலில் ஏற்றம்-இறக்கம் என்பது இயல்பான ஒன்று . ஆகவே பாஜகவை வீழ்த்தி காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் என்றார்.