பறக்கும்படையினரை பார்த்தவுடன் தங்க காசை பறக்கவிட்ட பாஜகவினர்

gold election modi bjp
By Jon Apr 05, 2021 02:11 AM GMT
Report

திருநள்ளாறில் பறக்கும் படையினரை பார்த்தவுடன் பாஜகவினர் வினியோகித்து வந்த தங்க காசுகளை பறக்கவிட்டு பதறியடித்து ஓடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதியில் பாஜக வேட்பாளராக ராஜசேகரும், காங்கிரஸ் வேட்பாளராக கமலக்கண்ணனும் போட்டியிடுகின்றனர்.

திருநள்ளாறு தொகுதி முழுவதும் பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற பராக்கியம் படையினர் தங்க காசுகளை வினியோகம் செய்துகொண்டிருந்த பாஜகவினரை கைது செய்தனர்.

இதையடுத்து பறக்கும் படையினர் திருநள்ளாறு பகுதி முழுவதும் நேற்று காலை அதிரடியாக சோதனையிட்டபோது, அங்கு தங்க காசுகள் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது தெரியவந்தது.

அப்போது பறக்கும் படையினரை கண்ட சிலர், கையிலிருந்த தங்க காசுகளை சாலையில் வீசி விட்டு தப்பி ஓடினர். பின்னர் பறக்கும் படையினர், சாலையில் கிடந்த 159 தங்க காசுகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

  

Gallery