தடையை மீறி போராட்டம் - பாஜகவினர் மீது வழக்கு பதிவு!
தஞ்சாவூரில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட 20 பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் .
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை தடைசெய்யக் கோரி பாஜகவினர் உண்ணாவிரத அறப்போராட்டம், தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிடக்கோரி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தஞ்சாவூரில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் பனகல்புலி அருகில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் காலையில் தொடங்கி மாலை 5 மணிக்கு முடிந்தது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன், எச். ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலரும் பங்கேற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் டெல்டா விவசாயிகள் பங்கேற்றனர் . இந்த நிலையில் இந்த போராட்டத்தில் தமிழக பாஜகவினர் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றதாக சொல்லி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட 20 பாஜகவினர் மீது தஞ்சை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.