புலம் பெயர் தொழிலாளர்கள் விவகாரம் :வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உமராவ் மன்னிப்பு கேட்க உத்தரவிட்டுள்ளது.
புலம் பெயர் தொழிலாளர்கள்
தமிழ்நாட்டில் புலம் பெய்ர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உமராவ் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதிகள் பிஆர் மற்றும் மிட்டல் உள்ளிட்டோர் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

நீதிமன்றம் உத்தரவு
இந்த விவகாரத்தில் உம்ராவ் மீது பல்வேறு எப்ஃஐஆர்கள் பதியப்பட்டு வருகிறது. உம்ராவ் நேரடியாக சென்றால் அவருக்கு எதிராக உள்ள மற்ற எப்ஃஐஆர்களில் தமிழ்நாடு காவல்துறை அவரை கைது செய்யும் என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதன்பின், பாஜக நிர்வாகியான பிரஷாந்த் உம்ராவ்-ன் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி, ஏப்ரல் 10ம் தேதி காலை 10 மணிக்கு மனுதாரர் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan