நில அபகரிப்பு புகாரில் முக்கிய பாஜக நிர்வாகி அதிரடி கைது
நில அபகரிப்பு புகாரில் பாத்திமா அலி என்ற பாஜகவின் பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாஜக நிர்வாகி கைது
ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு பிரிவாக செயல்பட்டு வருவது ராஷ்ட்ரிய மஞ்ச் என்ற பிரிவு. இந்த அமைப்பு இஸ்லாமியர்களிடையே தேசிய உணர்வு, நாட்டுப்பற்று, சங்பரிவாரின் இந்துத்துவா கொள்கைகளை இந்திய முஸ்லிம்களிடம் கொண்டு செல்வதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பால் உருவாகப்பட்ட பிரிவு தான் ராஷ்ட்ரிய மஞ்ச்.
இந்த பிரிவு 2002 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த சுதர்சன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்தியா முழுவதும் 26 மாநிலங்களில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

மத்திய பாஜகவால் முத்தலாக் தடைச் சட்டம் நடைமுறைப்படுத்தியதை வரவேற்றது இந்த பிரிவு. முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் பிரிவின் தமிழ் மாநில தலைவராகவும், தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு நிர்வாகியாகவும் பாத்திமா அலி இருந்து வருகிறார்.
இவர் மீது நில அபகரிப்பு புகார் எழுந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னையில் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.