முதலமைச்சர் குறித்து அவதுாறு பேச்சு - பாஜக நிர்வாகி அதிரடி கைது!

Arrested BJP மு.க.ஸ்டாலின் பாஜக முதலமைச்சர் Executive
By Thahir Apr 09, 2022 03:18 AM GMT
Report

நாகர்கோவில் ஆரால்வாய்மொழியில் நேற்று முன்தினம் பாஜக நிறுவன தினத்தை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட பாஜக பிரச்சாரப் பிரிவு தலைவர் ஜெயப்பிரகாஷ் பேசும் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

கனிமொழி குறித்து அவதுாறாக பேசியதாக,வீடியோ ஆதாரத்துடன் திமுக மாவட்டப் பொருளாளர் கேட்சன் போலீஸில் புகார் அளித்தார்.

இதையடுத்து ஜெயபிரகாஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இரணியலில் உள்ள ஜெயபிரகாஷின் வீட்டுக்கு நேற்று அதிகாலை சென்ற போலீசார் கைது செய்ய முயன்றனர்.

இத்தகவல் அறிந்ததும் பாஜக மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் ரமேஷ்,கட்சி தொண்டர்கள் அங்கு திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர்,ஜெயபிரகாஷை கைது செய்து ஆரல்வாய்மொழி காவல் நிலையம் கொண்டு சென்ற போது அங்கும் பாஜகவினர் திரண்டு எதிர்ப்பு கோஷமிட்டனர்.