செருப்புகளை தூக்கவே அரசு அதிகாரிகள்: பாஜக முன்னாள் முதலமைச்சர் சர்ச்சை பேச்சு

BJP Uma Bharti EX CM Controversial speech
By Thahir Sep 22, 2021 04:36 AM GMT
Report

மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான உமா பாரதி கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் பிற்படுத்தப்பட்டோர் மகாசபாவைச் சேர்ந்த குழுவினரை சந்தித்தார்.

அப்போது, சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது, தனியார் துறைகளில் சாதிவாரி இடஒதுக்கீடு என்பன உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திய அந்த குழுவினர்,

செருப்புகளை தூக்கவே அரசு அதிகாரிகள்: பாஜக முன்னாள் முதலமைச்சர் சர்ச்சை பேச்சு | Bjp Ex Cm Uma Bharti Controversial Speech

தங்களுடைய கோரிக்கைகளை ஆளும் பாஜக அரசு நிறைவேற்ற மறுத்தால், மாநில அளவில் போராட்டம் நடத்தப்போவதாகவும் உமா பாரதியிடம் எச்சரித்திருந்தனர்.

அப்போது அவர்களிடம் இந்தியில் பேசிய உமா பாரதி, “அதிகாரவர்க்கம் என்பது ஒன்றுமில்லை. அவர்கள் எங்களுடைய செருப்புகளை தூக்கவே இருக்கிறார்கள்.

உண்மையில் அப்படி அவர்கள் செய்வதை நாங்கள் அனுமதிக்கிறோம். அவர்களுக்கென எந்தவொரு ஆற்றலும் கிடையாது” என்று பேசியுள்ளார்.

மேலும், அரசு அதிகாரிகள் அரசியல் தலைவர்களை கட்டுப்படுத்த முடியாது. மத்தியில் 11 ஆண்டுகள் அமைச்சராக இருந்திருக்கிறேன்.

முதல்வராகவும் இருந்திருக்கிறேன். எந்த ஒரு கோப்பாக இருந்தாலும் எங்களுடன் பேசித்தான் அவர்கள் முடிவெடுப்பார்கள் என்றும் உமா பாரதி பேசியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

உமா பாரதியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, “முன்னாள் முதல்வரின் இந்த கருத்து மிகவும் அவமானகரமானது.

அவரது கருத்து குறித்து ஆளும் முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் விளக்கம் தர வேண்டும். உண்மையில் அதிகாரிகள் அப்படித்தான் செய்கிறார்களா என்று அவர் தெளிவுபடுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அரசு அதிகாரிகள் குறித்து தாம் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு உமா பாரதி மன்னிப்பு கோரியுள்ளார். “அலுவல்பூர்வமற்ற வகையில் நடந்த நிகழ்வு. அவர்களுடன் எதேச்சையாக நான் கலந்துரையாடினேன்.

நல்ல உணர்வுடன் நான் வெளிப்படுத்த நினைத்த செய்திக்கு தவறான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கோருகிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.