பாஜகவில் தொடரும் பாலியல் லீலைகள் - அடுத்து ரிலீசான முன்னாள் அமைச்சரின் வீடியோ!
பாஜக மூத்த தலைவர் சதானந்த கவுடா குறித்த சர்ச்சை வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், அவர் இது குறித்து சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
கர்நாடக மாநில பாஜக தலைவர்களில் ஒருவர் சதானந்த கவுடா. முன்னாள் மத்திய அமைச்சரான இவர், கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராகவும் இருந்துள்ளார்.இந்தநிலையில், தற்போது எம்.பி.யாக இருக்கும் இவர், ஒரு பெண்ணுடன் வீடியோ காலில் பேசுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் தான் பாஜக நிர்வாகி கே.டி.ராகவனின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் மேலும் ஒரு பாஜக நிர்வாகியின் வீடியோ இணையத்தில் கசிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்த வீடியோவில் இருப்பது தானல்ல என்றும், அந்த வீடியோ மார்ஃபிங் செய்யப்பட்டது என்றும் சதானந்த கவுடா விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "என்னுடைய மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. தனிப்பட்ட நலன்களுக்காக, அப்பழுக்கற்ற எனது பிம்பத்தை சீர்குலைக்கும் வகையில் எனது எதிரிகளால் அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சைபர் க்ரைம் போலீசில் வழக்குப்பதிவு செய்துள்ளேன், தவறு செய்தவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த 2018ஆம் ஆண்டு பாஜகவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக சதானந்த கவுடா மீது குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Malefactors, who are upset by my rise on the political front, have brought out a fake, lewd video of mine for my fall. The video has become viral on social media, which pains me. 1/2 pic.twitter.com/8SrGH9A2WM
— Sadananda Gowda (@DVSadanandGowda) September 19, 2021