தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜக முத்திரை!

Kerala
By Fathima Mar 24, 2026 03:38 AM GMT
Report

கேரளாவில் தேர்தல் ஆணையம் அனுப்பிய அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றில், கேரள மாநில பாஜக முத்திரை இடம்பெற்றிருந்தது சர்ச்சையை கிளப்பியது.

இதனை புகைப்படமாக எடுத்து சிபிஎம் கட்சி சமூகவலைத்தளத்தில் வெளியிட்டதுடன், இந்திய தேர்தல் ஆணையத்தையும் பாஜகவையும் ஒரே சக்தி தான் இயக்குகிறது என்பது ரகசியமல்ல.

குறைந்தபட்சம் தனித்தனி மேஜைகளையாவது பயன்படுத்துங்கள், எந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரை சின்னம் தான் வரும் என்பது போல, இது தற்செயலான நிகழ்வா? என கேள்வி எழுப்பியது.

இது சர்ச்சையான நிலையில், விளக்கமளித்துள்ள தேர்தல் ஆணையம், எழுத்துப்பிழை எனவும், தவறாக பாஜகவின் முத்திரை பயன்படுத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் தவறு உடனடியாக சரிசெய்யப்படும் எனவும் உறுதியளித்துள்ளது.  

தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜக முத்திரை! | Bjp Emblem Used In Election Commission Letter