சில கட்சிகள் பாஜகவுக்கு வேலை செய்கின்றன: கடும் விமர்சனம் வைக்கும் இந்திய கம்யூனிஸ்ட்
திமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி ஒதுக்கீடு உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியோடு தொகுதி உடன்பாடு செய்வதில் இழு பறி நீடித்த நிலையில் தற்போது தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்க்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
1.பாவானிசாகர் ( தனி) 2.திருப்பூர் வடக்கு 3.வால்பாறை (தனி) 4.சிவகங்கை 5.திருத்துறைப்பூண்டி (தனி) 6.தளி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் செய்தியாளார்களை சந்தித்த கம்யூனிட் கட்சியின் மாநிலசெயலாளர் முத்தரசன்,திராவிட கழகத்தின தலமையில் கூட்டணி நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார்.
மேலும், சில கட்சிகள் பாஜகவுக்கு வேலை செய்வதாகவும் அவர்களின் கனவை முறியடிப்போம் என முத்தரசன் கூறினார்.