50 லட்சம் வேலைவாய்ப்பு, பஞ்சமி நில மீட்பு, பூரண மதுவிலக்கு - பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

Parliament tamilnadu bjp eelction
By Jon Mar 24, 2021 05:19 PM GMT
Report

பாஜகவின் தமிழக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திங்கள்கிழமை வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் அறிக்கையை அனைத்து கட்சிகளும் வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று சென்னையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை 'தொலைநோக்கு பத்திரம்' என்னும் பெயரில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார்.

அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்: 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் மீனவர்களுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை ரூ. 6,000 தமிழகத்தில் உள்ள 12 லட்சம் பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடம் வழங்கப்படும் 8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி பூரண மதுவிலக்கு சென்னை மாநகராட்சி 3 மாநகராட்சிகளாக பிரிக்கப்படும்.

மேலும் தேசிய கல்வி கொள்கை முழுமையாக அமல்படுத்தப்படும் என்றும் மதமாற்ற தடைச் சட்டம், பசுவதை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய சட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.


Gallery