"சினிமா நடிகர்களை வைத்து வென்றுவிடலாம் என பாஜக கனவு காண்கிறது" - செ.கு தமிழரசன் பேச்சு
திரைப்பட நடிகர் நடிகைகளை வைத்துகொண்டு பாஜக தனக்கு பலம் வந்துவிட்டதாக சொல்கிறது, ஆனால் தமிழகத்தில் காலை கூட ஊன்ற முடியாது என இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு தமிழரசன் பேட்டி. ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகரில் உள்ள தனியார் விடுதியில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ கு தமிழரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழகத்தில் அதிமுக ஆட்சி என்பது பாஜகவின் ஆட்சியாக மாறிவிட்டதாகவும், இதனால் தாழ்த்தப்பட்டோருக்கு எந்த விதமான புதிய திட்டங்களையும் செயல்படுத்த முடியாத நிலை இருப்பதாக கூறினார். ஆகவே நடைபெறவிருக்கின்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போது குரு என்பது மிக வேகமாக பரவி வருவதாகவும், மக்களின் பாதுகாப்பு கருதி முடியுமானால் இந்த தேர்தலை தேர்தல் ஆணையம் தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பாஜக திரைப்பட நடிகர் நடிகைகளை வைத்து தனக்கு பலம் வந்து விட்டதாக சொல்லிக் கொண்டு இருக்கிறது, ஆனால் உண்மையில் தமிழகத்தில் பாஜக காலூன்ற கூட முடியாது என விமர்சித்தார்.