மேகதாது விவகாரம் .. பாஜாக இரட்டை வேடம் போடும் வேடதாரி ..மாநில நிர்வாகிகள் வெறும் பொம்மைகள் : சாடிய கமல்ஹாசன்
காவிரி விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாகவும் மாநில நிர்வாகிகள் இதில் வெறும் பொம்மைகள்தான் எனமக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நேர்மையாக எங்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் வணக்கம் தெரிவித்துச் செல்வதற்காக கோவை வந்துள்ளோம்.
கொரோனா தொற்று காரணமாக, முன்னதாகவே வர இயலவில்லை மக்களைச் சந்திக்கும் வகையில், அதிக அளவில் நிகழ்ச்சிகளை திட்டமிட்டு வந்தோம். ஆனால், மக்களின் நலன் கருதி அவற்றை ரத்து செய்துவிட்டதாக கூறினார்.
மேலும், மக்கள் நீதி மய்ய கட்சியிலிருந்து வெளியேறியவர்களால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறிய கமல்ஹாசன் கோவைக்கு நாங்கள் முக்கியத்துவம் அளிப்பதற்குக் காரணம், காசு கொடுக்க மாட்டோம் என்று சொல்லியும், வெற்றிக்கு அருகில் கொண்டுபோய் சேர்த்தவர்கள் கோவை மக்கள். இங்கு கொங்கு நாடு என்பது ஒரு அரசியல் கோஷம் ஆகும்.

அதை மக்களின் தேவையாக நான் பார்க்கவில்லை. மக்களே அதற்குச் சரியான பதில் சொல்வார்கள். மேலும், இது ஒரு அரசியல் கட்சியின் யோசனை இல்லை. ஒரு பெருநிறுவனத்தின் யோசனை. ஆங்கிலேயர் காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி இருந்தது போல், தற்போது வட இந்திய கம்பெனி ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர், அவ்வளவுதான். இந்த சுரண்டலுக்கு எந்த மாநிலமும் இடம் கொடுக்காது என்பது எனது நம்பிக்கை என கமல்ஹாசன் பேசினார்.
பின்னர் காவிரி விவகாரம் குறித்து பேசிய கமல்ஹாசன் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதாகத் தொடர்ந்து கூறி வருகிறது. என்னைப் பொறுத்தவரை பாஜக இதில் இரட்டை வேடம்தான் போடுகிறது. மாநில நிர்வாகிகள் வெறும் பொம்மைகள்தான் என கமல்ஹாசன் குற்றம் சாட்டினார்.