அதிமுகவை பாஜக கட்டுப்படுத்தவில்லை - இபிஎஸ் விளக்கம்
அதிமுகவை பாஜக கட்டுப்படுத்தவில்லை என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனியாக பிரிந்து இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
பொதுக்குழுவில் இபிஎஸ் அணியினர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மாவட்ட செயலாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை
இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் இன்று தலைமை கழக அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பன்னீர்செல்வம் அணிக்கு போனவர்கள் மீண்டும் இணைக்க கூடாது. பழையன கழிந்தால் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க இருக்கட்டும்.
பன்னீர்செல்வம் அணியை மட்டுமின்றி அந்த அணிக்குப் போனவர்களையும் மீண்டும் இணைக்க கூடாது என்றார்.
இதையடுத்து பேசிய நத்தம் விஸ்வநாதன் பொருட்களில் போலியானவற்றை பார்த்திருப்போம், அரசியலில் போலி ஓபிஎஸ் கட்சியிலிருந்து அவர் ஒதுக்கப்பட்டத்தில் மாற்றம் ஏதும் இல்லை.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி தொடர்ந்து செயல்படும் என கூறினார். சட்டசபை தேர்தலை போல நாடாளுமன்ற தேர்தலையும், எதிர்கொள்ள தயார் என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டாக வலியுறுத்தினர்.
திமுகவின் பி டீமாக செயல்படுகிறார் ஓபிஎஸ்
பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, மக்களவை தேர்தலுக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும். மக்கள் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் வாக்குசாவடி அளவில் அதிமுகவை வலுப்படுத்த வேண்டும்.

ஓபிஎஸ் பணத்தை கொடுத்து கூட்டத்தை கூட்டி உள்ளார். திமுகவின் பி டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார். கூட்டணி பேச்சுவார்த்தையை தலைமை பார்த்து கொள்ளும். எந்த கட்சிக்கு எவ்வளவு இடம் என்பதை அதிமுக முடிவு செய்யும்.
அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளோம்.
அதிமுகவை பாஜக எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தியதில்லை.இதை செய்யுங்கள் அதை செய்யுங்கள் என பாஜக வற்புறுத்தியதில்லை என்றார்.
தமிழீழம் கோரும் புலம்பெயர்ந்தோருடன் தொடர்பில்லை : தென்னிலங்கையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா! IBC Tamil
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan