கடையை மூட சொல்ல உங்களுக்கு ரைட்ஸ் கிடையாது...பாஜக நிர்வாகி - திமுக சேர்மன் வாக்குவாதம்

DMK BJP
By Thahir Sep 20, 2022 10:34 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி தொகுதியில் கடையடைப்பு போராட்டத்தில் கடையை அடைக்க சொல்லி பாஜக நிர்வாகி ஒருவர் திமுக சேர்மனோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சர்ச்சை பேச்சு - கடையடைப்பு 

இந்துக்கள் குறித்து இழிவாக பேசியதாக திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து நீலகிரி தொகுதியில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

அண்மையில் ஆ.ராசா இந்துக்கள் குறித்து இழிவாக பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் ஆ.ராசாவை கைது செய்யக்கோரி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் நீலகிரி தொகுதியில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடையை மூட சொல்ல உங்களுக்கு ரைட்ஸ் கிடையாது...பாஜக நிர்வாகி - திமுக சேர்மன் வாக்குவாதம் | Bjp Dmk Chairman Argument

இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் கடையை மூட சொல்லி வியாபாரிகளை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி அறிந்த சத்தியமஙகலம் திமுக சேர்மன் அங்கு சென்று கடையை சாத்த சொல்ல உங்களுக்கு ரைட்ஸ் கிடையாது என்று கூறியதால் அவருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.