மதம்,மொழியின் பெயரால் மக்களை சண்டையிட தூண்டுகிறது பாஜக - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

Indian National Congress Rahul Gandhi India
By Jiyath Jan 21, 2024 02:44 AM GMT
Report

மதம் மற்றும் மொழியின் பெயரால் பாஜக தங்களுக்குள் சண்டையிட மக்களைத் தூண்டுகிறது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

நடைபயணம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொள்கிறார்.

மதம்,மொழியின் பெயரால் மக்களை சண்டையிட தூண்டுகிறது பாஜக - ராகுல் காந்தி குற்றச்சாட்டு! | Bjp Dividing Country In Name Of Creed Religion

தற்போது அசாமை தொடர்ந்து அருணாச்சல பிரதேசத்தில் அவர் யாத்திரையை தொடங்கினார். அப்போது பேசிய ராகுல் காந்தி "மதம் மற்றும் மொழியின் பெயரால் பாஜக தங்களுக்குள் சண்டையிட மக்களைத் தூண்டுகிறது. நாட்டை பிரிக்கிறது.

துன்பங்கள் 

பாஜக ஒரு சில தொழிலதிபர்களின் நலனுக்காக பாடுபடுகிறதே தவிர, மிகவும் கஷ்டப்படும் மக்களின் நலனுக்காக அல்ல. மறுபுறம், காங்கிரஸ் மக்களை ஒன்றிணைப்பதற்கும் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் செயல்படுகிறது.

மதம்,மொழியின் பெயரால் மக்களை சண்டையிட தூண்டுகிறது பாஜக - ராகுல் காந்தி குற்றச்சாட்டு! | Bjp Dividing Country In Name Of Creed Religion

பாஜக ஆட்சியில், மக்களின் குறைகளைக் கேட்க அரசு தயாராக இல்லை. அவர்களின் பிரச்சினைகளை ஊடகங்கள் எழுப்பவில்லை.

யாத்திரையின் போது, காலை முதல் மாலை வரை பல மணிநேரம் பயணித்து, மக்களின் வலி மற்றும் துன்பங்களை கேட்கும் இடங்களில் நின்றுகொண்டிருக்கிறேன்" என்று தெரிவித்தார்.