திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு மிரட்டல் விடுத்த பாஜக மாவட்ட தலைவர் கைது - 15 நாள் நீதிமன்ற காவல்
திமுக எம்.பி. ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசிய கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமியை போலீசார் கைது செய்த நிலையில் அவருக்கு 15 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சை பேச்சு பாஜக மாவட்ட தலைவர் கைது
கோவை பீளமேடு பகுதியில் சமீபத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் நீலகிரி திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசினார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை அடுத்து கோவை பாஜக மாவட்ட தலைவர் ராமசாமியை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் பாஜகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட நிலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் குண்டு கட்டாக துாக்கி கைது செய்தனர்.