மூன்றாவது குழந்தை பெற்றது குற்றமா? பாஜக கவுன்சிலர்கள் தகுதி நீக்கம் - அதிர்ச்சி பின்னணி!
குஜராத்தின் அம்ரேலி நகரை சேர்ந்த இரு பாஜக கவுன்சிலர்கள் கடந்த ஆண்டு மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்தனர்.
மூன்றாவது குழந்தை
இதன் காரணமாக அவர்கள் இருவரும் உள்ளாட்சி அமைப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது குஜராத் முனிசிபாலிட்டி சட்டத்தை மீறியதன் அடிப்படையில் இருவரையும் தகுதி நீக்கம் செய்ய அம்ரேலி மாவட்ட ஆட்சியர் அஜய் தஹியா உத்தரவிட்டுள்ளார்.
பாஜகவின் உள்ளூர் தலைவர்களான கிமா கசோடியா மற்றும் மேக்னா போகா ஆகியோர், அம்ரேலியின் தாம்நகர் நகர்ப்புற உள்ளாட்சி கவுன்சிலர் பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு கவுன்சிலர்கள் இருவரும் தாம்நகர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டபோது,
பாஜக கவுன்சிலர்கள்
தங்களது இரு குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்திருந்தனர். தற்போது தத்தம் மூன்றாவது குழந்தையை பெற்றுக்கொண்டது தொடர்பான பிறப்புச் சான்றிதழ்கள் மூலம் நகராட்சிக்கு தெரிய வந்தது. மூன்றாவது குழந்தையின் பெற்றோர், குஜராத்தின் நகராட்சி சட்டத்தின் கீழ் மாநிலத்தின் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட முடியாது.
கிமா கசோதியா, மேக்னா போகா ஆகியோர் 2021-ம் ஆண்டு தேர்தலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் இவர்களுக்கு தலா இரு குழந்தைகள் மட்டுமே இருந்தன. இதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அனுப்பிய சம்மனுக்கு அவர்கள் பதிலளித்தனர்.
அதில் உள்ளாட்சித் தேர்தலுக்கு பின்னரே தங்களுக்கு மூன்றாவது குழந்தை பிறந்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த விளக்கம் மாவட்ட ஆட்சியர் நிராகரித்ததை அடுத்து, பாஜக கவுன்சிலர்கள் இருவரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.