பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் இடையே நீடிக்கும் கூட்டணி குழப்பம்: இன்று மாலை இறுதி முடிவு எடுக்கபட உள்ளன
புதுச்சேரியில் பாஜக மற்றும் என். ஆர்.காங்கிரஸ் இடையேயான கூட்டணி குறித்த முடிவு இன்று மாலை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 14 தொகுதிகள் என்.ஆர்.காங்கிரசுக்கும், 10 தொகுதிகள் பா.ஜ.க.வுக்கும், 6 தொகுதிகள் அதிமுகவுக்கும் என முதலில் பேசப்பட்டது.
அதனை ஏற்க மறுத்து அதிக தொகுதிகள் கேட்ட என்.ஆர். காங்கிரஸ், ரங்கசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் நிபந்தனையை முன்வைத்தது. பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்பு என்.ஆர்.காங்கிரஸின் நிபந்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி என்.ஆர்.காங்கிரஸுக்கு 17, பாஜகவுக்கு 7 மற்றும் அதிமுகவுக்கு 6 இடங்கள் என உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், திங்கட்கிழமை மாலை அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.