கேப்டனின் ஆன்மா மன்னிக்காது: தமிழக பாஜக கடும் விமர்சனம்
மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது என தமிழக பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
வருகிற சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இரட்டை இலக்கங்களில் தொகுதிகள் தேமுதிக கேட்டு வந்ததாகவும், திமுக மற்றும் அதிமுக அதிகபட்சம் 7 தொகுதிகள் தர சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டு வந்தது.
எப்படியும் அதிமுகவுடன் கூட்டணி தான் என பரவலாக பேசப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக திமுகவுடன் இணைந்துவிட்டது தேமுதிக.
இன்று முதலமைச்சர் ஸ்டாலினை நேராக சென்று சந்தித்த தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணியை உறுதிசெய்தார்.
இதனை கடுமையாக விமர்சித்துள்ள தமிழக பாஜக,
”தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்கள். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!” என பதிவிட்டுள்ளது.
தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்கள். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று… pic.twitter.com/VgGbfLNZJW
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) February 19, 2026