”செங்கலை திருடிவிட்டார்” உதயநிதி ஸ்டாலின் மீது பாஜக நிர்வாகி பரபரப்பு புகார்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திலிருந்து செங்கலை திருவிட்டதாக உதயநிதி ஸ்டாலின் மீது கோவில்பட்டி காவல்நிலையத்தில் பாஜக நிர்வாகி நீதிபாண்டியன் புகார் அளித்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் விளாத்திகுளத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது, மதுரையில் 3 ஆண்டுகளுக்கு முன் அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டிக் கொடுத்தார்கள்.
உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அதைக் கையோடு எடுத்து வந்திருக்கிறேன். மதுரையில் அதிமுகவும், பாஜகவும் கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை இதுதான்” என கூறி ஒரு செங்கல்லை உயர்த்தி மக்களிடையே காட்டினார். இது தான் அவர்கள் கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை என்று கேலியாக பேசினார்.
உதயநிதி ஸ்டாலின் செங்கலை காண்பித்து தேர்தல் பிரச்சாரம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி பரவியது. இந்நிலையில் அவர் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்த செங்கலை திருடியதாக அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த புகாரை பாஜக நிர்வாகி நீதிபாண்டியன் கோவில்பட்டி காவல்நிலையத்தில் கொடுத்திருக்கிறார்.
அந்த புகாரில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்க்காக பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களால் கடந்த 27.01.2019ம் தேதியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதனையடுத்து, கடந்த 01.12.2020ம் தேதியன்று பூமி பூஜை செய்யப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 5.50 கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்றுச் சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றுச் சுவர் வளாகத்திற்க்குள் இருந்த செங்கலை திமுக-வின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருடி கொண்டு வந்துவிட்டார். இந்த உண்மையை அவரே விளாத்திக்குளத்தில் நடைபெற்ற பிராச்சார கூட்டத்தில் ஒத்துக்கொண்டார். தான் திருடி கொண்டு வந்த அந்த செங்கலையும் அங்கே கூடியிருந்த பொது மக்களிடத்தில் எடுத்து காண்பித்திருக்கிறார்.
380ன் படி தண்டிக்க தக்க குற்றச் செயலாகும். அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவர் திருடி வந்த செங்கலை கைபற்றி சட்டப்படி தண்டனை பெற்று தர வேண்டும் என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.