?LIVE :7வது முறையாக குஜராத்தில் ஆட்சியமைக்கிறது பாஜக
குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியமைக்கிறது பாரதிய ஜனதா கட்சி.
பாஜக தொடர்ந்து முன்னிலை
குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகளில் 149 இடங்களில் அபார முன்னிலை. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில், குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகளில் டிசம்பர் 1-ம் தேதி 89 தொகுதிகளிலும், டிசம்பர் 5-ம் தேதி 93 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து ஆளும் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

7வது முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக
மொத்தம் உள்ள 182 இடங்களில் பாஜக 150 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும், ஆம் ஆத்மி 7, மற்றவை 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
பாஜக தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் குஜராத்தில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து குஜராத்தில் 7வது முறையாக ஆட்சி அமைக்கிறது.