பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி பாஜக போராட்டம்!
இந்து கடவுள்களை தவறாக சித்தரித்து பேசியதாக கைது செய்யப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை குண்டாசில் கைது செய்ய வேண்டும் எனக் கூறி சென்னை,வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக போராட்டம்.

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, வேலூர் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் காந்தி ஆகியோரையும் இந்துக்கள் பற்றியும் அவதூராக கன்னியாகுமரியில் பேசிய ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தசரதன், மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் ராஜ்குமார் பாண்டியன் மற்றும் மாநில இளைஞரணி துணை தலைவர் குமார் மற்றும்
பாரதிய ஜனதா கட்சி மாவட்ட,மாநகர, ஒன்றிய மற்றும் அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டு ஜார்ஜ் பொன்னையா வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பாதிரியாரின் உருவ படத்தை எரித்தும் செருப்பு காலால் மிதித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.