முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாக பேசியதாக புகார் - பாஜக மாநில நிர்வாகி அகோரம் திடீர் கைது.
முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாகவும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசியதாக பாஜக மாநில துணை செயலாளர் அகோரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடு பகுதியை சேர்ந்தவர் அகோரம். இவர் பாஜகவில் ஓ.பி.சி அணியின் மாநில துணை தலைவராக பொறுப்பில் உள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் பாஜக சார்பில் அரியலூர் மாவட்டம் ஜெயகொண்டத்தில், மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு அகோரம்தான் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அகோரம், தமிழக முதல்வர் ஸ்டாலின் பற்றியும், தமிழக அரசை பற்றியும் தரக்குறைவாக பேசியுள்ளார்.. தமிழக அரசை தரக்குறைவாக விமர்சனம் செய்தது, பலருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதுமட்டுமல்ல, ஒரு வார காலத்திற்குள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காவிட்டால், தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று அந்த கூட்டத்தில் கூறினார்.
இதனால் இதுகுறித்து சீர்காழி போலீசில் புகார் செய்யப்பட்டது... இதையடுத்து, தனிப்படை போலீசார் அகோரத்தை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். பிறகு சீர்காழி துணை காவல் கண்காணிப்பாளர் லாமேக் முன்னிலையில் மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் அகோரம் ஆஜர்படுத்தப்பட்டார்..
அதற்குள், அகோரத்தை கைது செய்ததை அறிந்த பாஜக தொண்டர்கள் ஏராளமனோர் டிஎஸ்பி முன்பு திரண்டுவிட்டனர்.. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில், ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அகோரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழர் படுகொலை - காவல்துறையினரால் சுட்டு கொல்லப்பட்ட துப்பாக்கிதாரிகள் : மறைக்கப்படும் உண்மைகள் IBC Tamil
