உள்ளாட்சி தேர்தல்: ஒரே ஒரு வாக்கு மட்டும் பெற்ற பாஜக வேட்பாளர்
ராஜஸ்தானில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றிருப்பது பேசுப்பொருளாகியுள்ளது.
ராஜஸ்தானின் 309 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 10,245 கவுன்சிலர் பதவிக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகள் நடைபெற்றது.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் பாஜக 4171 வார்டுகளிலும், 3597 வார்டுகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பர்பத்சார் நகராட்சியின் 13வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரான கைலாஷ்சந்த் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், என்னுடைய வாக்கு 12வது வார்டில் உள்ளது, கட்சி தலைமை 13வது வார்டில் போட்டியிட அறிவுறுத்தியதால் அங்கு போட்டியிட்டேன், யாரோ ஒருவர் மட்டும் வாக்கு செலுத்தியுள்ளார் என தெரிவித்தார்.